Reading Time: < 1 minute

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், தனது இனவெறி குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் யவ்ஸ் ஃபிராங்கோயிஸ் பிளான்செட் கூறியுள்ளார்.

மேலும், இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங், மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜக்மீத் சிங் இதற்காக, மன்னிப்பு கேட்பார் என்று நம்புவதாகவும் பிளான்செட் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறையில் அமைப்பு வடிவ இனவெறி தொடர்பில் புதிய ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்தை பிளாக் கியூபெகோயிஸ் ஹவுஸ் தலைவர் தடுத்ததைத் தொடர்ந்து, பிளாக் நாடாளுமன்ற உறுப்பினர் அலன் தெர்ரியனை ‘இனவெறியன்’ என்று அழைத்ததற்காக ஜக்மீத் சிங் புதன்கிழமை பொது மன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அத்துடன், வியாழக்கிழமை, ஜக்மீத் சிங் தனது கருத்துக்களை நியாயப்படுத்தினார். இதன் விளைவாக எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.