Reading Time: < 1 minute

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்மூலம், அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

அரை மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த புதிய தடுப்பூசி நோய்ப்பரவலை எதிர்த்துப் போராடஉதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 விகித செயற்திறன் கொண்ட ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியை ஒருமுறை செலுத்தினாலேயே பாதுகாப்பு அளிப்பதாக, அந்நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது.

இதேவேளை மூன்று கண்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்றினால் ஏற்படக்கூடிய கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்து அந்தத் தடுப்பூசி 85 விகிதம் பாதுகாப்பை வழங்குவதாக தெரியவந்துள்ளது.