Reading Time: < 1 minute

கனேடிய மாகாணமொன்றில் சூரிய கிரகணத்தைப் பார்த்த 115 பேருக்கும் அதிகமானோருக்கு, கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண, Optometrists என்னும் கண் மருத்துவ துறை சார் அலுவலர்கள் அமைப்பு, (Association of Optometrists, OAO), ஏப்ரல் 8ஆம் திகதிக்குப் பின், கண் பிரச்சினையுடன் 118 பேர் மருத்துவமனைகளுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

அவர்கள், விழித்திரை வீக்கம் (Inflammation of the cornea), உலர் கண்கள் மற்றும் solar retinopathy என்னும் கண் பாதிப்பு ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவற்றில், இந்த solar retinopathy என்பதை, சூரியன் அல்லது சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு என்றே மருத்துவ அறிவியல் அழைக்கிறது.

விடயம் என்னவென்றால், இந்த விழித்திரை வீக்கம் சில நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளது. ஆனால், solar retinopathy என்னும் பாதிப்பு, சிலருக்கு, அதாவது, அவர்கள் எவ்வளவு நேரம் சூரியனைப் பார்த்தார்கள் மற்றும் அவர்களுடைய விழித்திரையின் எந்த பாகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.