Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயினால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

பத்து ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு மரணமொன்று பதிவாகியுள்ளது.

சிறுமியின் மரணத்தை கனடிய சுகாதார திணைக்களம் உறுதி செய்துள்ளது.

ஐந்து வயதுக்கும் குறைந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமி ஐந்து வயதுக்கும் கீழ்ப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் 22 தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இதில் 13 பேர் சிறுவர்கள் எனவும் ஏனையவர்கள் வயது வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.