Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் அலைபேசி பயன்பாடு தடை செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பாலர் பாடசாலை முதல் தரம் 6 வரையில் கற்கும் மாணவர்கள் பாடசாலை நேரத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.

தரம் 7 முதல் 12 வரையிலான மாணவ மாணவியர் வகுப்பு நேரத்தில் மட்டும் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட ள்ளது.

இந்த தடையை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் தடை உத்தரவினை மாணவர்கள் மீறினால் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்படக் கூடிய சாத்தியங்களும் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலைபேசிகள் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்துவதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தை கருத்திற் கொண்டு புதிய தடையை அறிமுகம் செய்வதாக ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீவன் லிச் தெரிவித்துள்ளார்.