Reading Time: < 1 minute உலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ்Read More →

Reading Time: < 1 minute ஸ்கார்பாரோவில் ஒரு நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் வாழ்ந்த முதிய தம்பதியினர் கொடிய கொரோனா (Covid19) தொற்றில் பலியாகியுள்ளனர். யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர். இருவரும் ஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் (Long term care homes) பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள். இவர்கள் தங்கியிருந்த நீண்ட கால பராமரிப்பு இல்லம் மிக பாரிய அளவில்Read More →

Reading Time: < 1 minute கனடா தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா (சோதி) அவர்கள் இன்று கொரொனா நோய் காரணமாக காலமாகிவிட்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை பிரம்டன், மிசிசாகா, நோர்த்யோர்க் மற்றும் ஈற்றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) அவர்கள் மேற்கொண்டுவந்தார். இவரின் துணைவியார் திருமதி சோதி (புஸ்பராணி) ,கொடிய ‘கொரோனா’வின்Read More →

Reading Time: < 1 minute நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் COVID 19 தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார். இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.Read More →

Reading Time: < 1 minute ஒன்ராரியோவில் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மார்ச் 17, 2020 பின் விலை உயர்த்தப்பட்டிருந்தால் நீங்கள் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு அறிவிக்கவும். அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருந்தால் 1 வருடம் சிறை, $100, 000 வரை அபராதம். ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு. இணைய இணைப்பு: https://www.ontario.ca/form/report-price-gouging-related-covid-19 தொலைபேசி இலக்கம்: 1-800-889-9768Read More →

Reading Time: < 1 minute குடியுரிமை / நிரந்தர வதிவிடவுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய கனடா தடை விதிக்கிறது. இந்த பயண தடையிலிருந்து, ராஜதந்திரிகள், விமான பணியாளர்கள், ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் ஆகியோருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி இருப்பவர்களும் நாட்டுக்குள் நுழைய முடியாது. கனடாவுக்கு வெளியிலுள்ள கனேடியர்கள் நாடு திரும்ப உரிய வசதிகள் செய்யப்படும். பணஉதவியும் செய்யப்படும். ஏற்றுமதி இறக்குமதி தவிர்ந்து, பயணிகள் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படும். நாட்டில் 4 விமான நிலையங்கள் மட்டும்Read More →

Reading Time: < 1 minute கொறோனா வைரஸ் உலகத்தை உலுக்கிக் கொண்டிருப்பதுநீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் மொன்றியல்திருமுருகன் கோயிலும் அடியவர்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு கொறோனா பரவலை தடுக்கும் அரசாங்கத்தின்முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன்மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும். வழமையான பூசைகள், சம்பிரதாயங்கள் தொடர்ந்து கோயிலுக்குஉள்ளே நடைபெறும்.Read More →

Reading Time: < 1 minute ஸ்காபோரோவில் (Scarborough) வில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை Brimley & Sheppard சந்திப்பின்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான வடமராட்சி கொற்றவத்தையை பிறப்பிடமாக கொண்ட தீபா சீவரட்ணம் ( Theepa Seevaratnam, November 11, 1980 பிறந்தவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை 9:55 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டதில் மரணமடைந்ததாக இன்று (சனிக்கிழமை)Read More →

Reading Time: < 1 minute எதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் பொதுநிகழ்வுகள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் பலவும் பிற்போடப்பட்டு வருகின்றன. 250 பேருக்கு மேலாக ஒன்றுகூடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருப்பதோடு, முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கனடிய வர்த்தக சம்மேளனம் உட்பட பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் பிற்போட்டிருப்பதாக அறிவித்திருகின்றது. இதேவேளை திருமணம், பிறந்தநாள் என பல்வேறு குடும்ப நிகழ்வுகளும் ஒத்திவரைக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தற்கால அவசர நிலைமைகளை கையாள்வதில் எமது ஆலயங்களின் பங்களிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனைத்து ஆலய குருமார்கள் (Gurus), கோயில்களின் இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் நமது மதத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர். CORONAVIRUS EPIDEMIC – URGNET MEETING All the Temple priests, members of the board of directors of temples and executiveRead More →

Reading Time: < 1 minute COVID-19 தொற்று நோயை எதிர்கொள்ளும் வகையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் நடத்தப்படும் வருடாந்த தொழில் முனைவோர் விருதுகள் விழா பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2020 நடைபெறவிருந்த விழா ஜூலை 25, 2020 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: 2 minutes அன்புள்ள பக்தர்கள், புரவலர்கள்,அர்ச்சகர்கள் மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் COVID-19 தொடர்பாக உள்ளூர், மாகாண மற்றும் மத்திய பொது சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கவனித்து, கோயில் நிர்வாகம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தும். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். 1.1 பக்தர்கள் “அர்ச்சனை தட்டை சன்னதிக்கு முன்னால் மேசையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்துஅர்ச்சனை தட்டை அர்ச்சகரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டாம்.Read More →

Reading Time: < 1 minute யாழ் நகர முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் காலமானார் ! யாழ் நகர முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ராஜா விசுவநாதன் அவர்கள் காலமானார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தந்தையுமாகிய இவர், தனது 94வது வயதில் ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் காலமாகினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் நகர முதல்வராக இருந்த அமரர் ராஜாRead More →