டெக்சாஸின் ஆஸ்டினில், சவிதா ஷான் சண்முகசுந்தரம் (24) ரைடர் ஹாரிங்டன் (22) மற்றும் ஜார்ஜ் பெடர்சன் (30) ஆகியோர் இஸ்லாமிய பயங்கரவாதி நிடியாகா டியாக்னே என்பவரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
செனகலைச் சேர்ந்த 53 வயதான முஸ்லிம் நபர் ஈரானியக் கொடி பொறிக்கப்பட்ட டி-சர்ட்டையும், “அல்லாஹ் வின் சொத்து” என்று எழுதப் பட்ட சட்டையையும் அணிந்திருந்தார். அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சவிதா ஷான் கல்லூரி வளாகத்தில் ஒரு தீவிர மாணவர் தலைவராக இருந்தார். அவர் ஆஸ்டினின் தமிழ் சங்கத்தில் தொண்டராகப் பணியாற்றினார். மேலும் சன்ஃப்ளேக் ஸ்டிக்கர்ஸ் என்ற மின்வணிக வணிகத்தையும் தொடங்கி நடத்தி வந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் “அல்லாஹ்வின் சொத்து” என்ற வாசகங்களும் இருந்தன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய மோதல் வெடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்போது உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் ஈரானுடனான தொடர்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.




