Reading Time: < 1 minute

மத்திய ஒட்டாவாவின் மேற்கே அடுக்குமாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

பிரிட்டானியா பூங்காவின் கிழக்கு எல்லையின் ஜெஃபிர் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கட்டடமொன்றிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2:50 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது.

இந்த தீவிபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், உணர்வற்ற நிலையில் ஒருவரை கண்டுள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதனை உறுதி செய்தனர்.

இதன்பிறகு படுகாயங்களுடன் காணப்பட்ட ஒருவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், உயிரிழந்தவர் மற்றும் படுகாயமடைந்தவரின் வயது மற்றும் பாலினம் வெளியிடப்படவில்லை. அத்தோடு, இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து இன்னமும் காரணம் தெரியாத நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.