Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோவில் இந்த வார இறுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு. சில பகுதிகளில் உறைபனி மழையும் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மொத்த அளவுகள் குறித்து ‘கணிசமான நிச்சயமற்ற தன்மை’ இருப்பதாக தேசிய வானிலை நிறுவனம் ஒப்புக் கொண்டாலும், 25 முதல் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒன்றாறியோ ஏரிக்கு அருகே இந்த காற்று பலமாக இருக்கும் எனவும், மழையுடன் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




