Reading Time: < 1 minute
Tamil Business Directory
மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் நாட்களில் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என்பதால், அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மெட்ரோ வன்கூவர், ஃப்ரேசர் பள்ளத்தாக்கு மற்றும் வான்கூவர் தீவின் சில பகுதிகளுக்கு தற்போது சிறப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் நாட்களில் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆகையால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், வெளியில் செல்லும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




