Reading Time: < 1 minute

கனடாவின் எட்டோபிகோக்கிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

குறித்த இளைஞர் பிராம்ப்டனைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க அமீர் நரேன் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 அளவில் கிப்லிங் மற்றும் ஸடீல்ஸ் அவனியு பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் முன்னதாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக விசாரணை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் கனடாவில் இடம்பெற்ற 51 வது படுகொலைச் சம்பவம் இதுவாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காருக்குள் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வன்முறைத் தாக்குதல் தொடர்பாக தடயவியல் அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.