கனடாவின் ஹமில்டன் நகரில் உள்ள ஜாக்சன் ஸ்கொயர் (Jackson Square) வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் சனிக்கிழமை பிற்பகலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர் சந்தேகநபர்கள் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் ஆயுதங்களுடன் இருந்ததாகவும், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் ஹாமில்டன் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பின்னர் வணிக வளாகம் முழுவதும் மூடப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. கண்காணிப்பு கமெரா காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.