Reading Time: < 1 minute

ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற மர்மமான மரணம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

Tamil Business Directory

குயிண்ஸ்டொன் வீதி மற்றும் நாஷ் வீதி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, நேற்று (திங்கட்கிழமை) இரவு பத்துமணியளவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது.

மரணத்திற்கான தெளிவான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகள், இது குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஹமில்டன் பொலிஸார், இதனை கொலை என்று வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டில், ஹமில்டனில் இடம்பெற்றுள்ள எட்டாவது மனிதக் கொலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.