Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக பல மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

Tamil Business Directory

ஒட்டாவா மருத்துவமனை (The Ottawa Hospital) தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதேவேளை, London Health Sciences Centre சுமார் 200 செவிலியர் பணியிடங்களையும், Chatham-Kent Health Alliance 49 பணியிடங்களையும் நீக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண அரசு இந்த ஆண்டிற்கு 1.1 பில்லியன் டொலர் கூடுதல் நிதி வழங்கியிருந்தாலும், மருத்துவமனைகளின் தேவைகள் அதைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல மருத்துவமனைகள் தங்களது அவசர சேமிப்பு நிதியை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, அடுத்த மூன்று ஆண்டுகளில் வரவு-செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் நோயாளி சேவைகளை பாதிக்காது என அரசு தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் செவிலியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “ஒவ்வொரு பணியாளர் குறைப்பும் நேரடியாக நோயாளி பராமரிப்பை பாதிக்கும்” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு, மருத்துவ உபகரணங்களின் விலை உயர்வு மற்றும் சேவைச் செலவுகள் அதிகரித்திருப்பதே இந்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.