Reading Time: < 1 minute

நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இன்று மாலை 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Bathurst Streetற்கு தெற்கே, Sunnycrest வீதி மற்றும் Rockford வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், இன்று மாலை 5:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு ஆண் சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ காவல்துறையினரின் தரவுகளின் பிரகாரம், இந்த ஆண்டில் கடந்த 23ஆம் திகதி வரையில் ரொரன்ரோ நகரில் 325 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் காயமடைந்த 484 பேரில் 26 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.