Reading Time: < 1 minute
Tamil Business Directory
நேற்று பிற்பகல் ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்ற பாதுகாப்பினை வலியுறுத்தும் பேரணியில் 15,000ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
மதியத்திற்கு முன்னதாகவே அங்கு கூடிய ஆயிரக்கணக்கானோர், “சுற்றுச்சூழல் உங்களது அரசியல் விளையாட்டுத் திடல் அல்ல” “உங்கள் மனச்சாட்சிப்படி நடந்துகொள்ளுங்கள்” உள்ளிட்ட கருத்துப்படும் படியான பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இளைஞர்காளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் பல்வேறு வயதினரும் கலந்துகொண்டதுடன், பேரணியில் சுமார் 20,000 பேர் வரையில் கலந்துகொண்டதாக காவல்துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.




