Reading Time: < 1 minute கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மாணவர் வீசாவில் கனடாவிற்குள் பிரவேசித்த சிலரே இவ்வாறு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்திய குடிவரவு முகவர்களினால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தம்மை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 2021ம் ஆண்டு முதல்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை பைடன் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடா விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் (Justin Trudeau) ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் கனடிய நாடாளுமன்றில் பைடன் விசேடRead More →

Reading Time: < 1 minute பிராம்டனில் ஒரு மாத காலமாக மாயமானதாக கூறப்படும் இந்திய இளைஞர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். பிப்ரவரி 23ம் திகதி முதல் 23 வயதான பரஸ் ஜோஷி மாயமாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராம்டனில் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில் சம்பவத்தன்று சுமார் 4.30 மணியளவில் கடைசியாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட பரஸ் ஜோஷி சுமார் 143 பவுண்டுகள் எடைRead More →

Reading Time: < 1 minute கொலைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கனேடிய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கனடிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் மரண தண்டனையை ஆதரவினை வெளியிட்டுள்ளனர். கருத்துக் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம்; இந்த விடயம் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Research Co என்ற நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது. கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு நாட்டில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மக்கள்Read More →

Reading Time: < 1 minute ஓல்ட் மொன்றியாலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. வியாழனன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 7 என தெரியவந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தொடர்புடைய கட்டிடத்தில் சில பகுதியை இடிக்கும் பணியானது ஞாயிறு பகல் தொடங்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர். காணாமல் போனவர்கள் என கூறப்படுவோர்Read More →

Reading Time: < 1 minute சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு கனடாவில் வீசா விண்ணப்பங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய நில அதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தற்காலிகமாக வதிவோர் தங்களது வீசா காலத்தை நீடித்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீசா விண்ணப்பங்கள் தொடர்பிலும் இந்த இரு நாட்டுப் பிரஜைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என குடிவரவு அமைச்சர் சீன்Read More →

Reading Time: < 1 minute இம்மாதம், மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. 11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள். மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது. ஆம், அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். ஆகவே, அதை கொலை வழக்காக கருதி பொலிசார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார்கள். அந்தக் குழந்தையைத் தாக்கியதுRead More →

Reading Time: < 1 minute கடந்த ஓராண்டுக்கு முன்னர், வீடு புகுந்து கடத்தப்பட்ட Elnaz Hajtamiri வழக்கில் அதிரடி திருப்பமாக பிராம்டன் பெண் ஒருவர் கைதாகியுள்ளார். ஒன்ராறியோ மாகாண காவல்துறை வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறித்த கைது நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ஒரு மாதத்திற்கு பின்னர் ஒன்ராறியோ பொலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அந்த சந்தேக நபர்களில் ஒருவர் 35 வயதுடைய தேஷான் டேவிஸ்Read More →

Reading Time: < 1 minute வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதை கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஜேர்மனி விரும்புகிறது. வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்காக, ஜேர்மன் பெடரல் உள்துறை அமைச்சரான Nancy Faeserம், தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heilம், வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்குச் செல்ல இருக்கிறார்கள். அதன்படி அவர்கள் தொழிலாளர் சந்தை கொள்கைகள், புலம்பெயர்தல் மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து கற்றுக்கொள்வதற்காக, கனேடிய அமைச்சர்களுடன் பல சந்திப்புகளைRead More →