Reading Time: < 1 minute
Tamil Business Directory
நேற்று இரவு ஸ்காபரோ Agincourt பகுதியில் வைத்து வாகனம் ஒன்றினால் மோதுண்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Finch Avenue மற்றும் McCowan வீதிப் பகுதியில் நேற்று இரவு 11:10 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தினால் மோதுண்ட குறித்த அந்த பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திந்த நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




