Reading Time: < 1 minute

நேற்று பின்னிரவு வேளையில் பிரம்டன் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Dixie வீதி மற்றும் Advance Boulevard பகுதியில் நேற்று இரவு 11:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை பீல் பிராந்தியக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.