Reading Time: < 1 minute
Tamil Business Directory
நேற்று இரவு மிசிசாகா பகுதியில் கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Aerowood Drive மற்றும் Dixie வீதிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கறுப்பு நிற வாகனம் ஒன்றின் பின் புறத்தில் உந்துருளி ஒன்று மோதுண்டுள்ளதனை, சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள் காட்டுகின்றன.
இந்த விபத்தின் போது உந்துருளியில் இருந்த இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




