Reading Time: < 1 minute

இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் செயல்பாட்டாளர் 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுகொல்லப்பட்டார்.

Tamil Business Directory

கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவத்தினால் இந்தியா – கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாகக் 22 வயதான கரன் பிரார், 22 வயதான கமல்ப்ரீத் சிங், 28 வயதான கரன்ப்ரீத் சிங் ஆகிய மூன்று பேர் இந்தியர்களை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எட்மாண்டனில் வசித்து வந்த அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.