கனடாவின் வரலாற்றில் முதல்முறையாக தேசிய அளவிலான இறையாண்மை செல்வ நிதியத்தை (Sovereign Wealth Fund) உருவாக்கப்போவதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
“கனடா ஸ்ட்ராங் ஃபண்ட்” (Canada Strong Fund) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு முதலீட்டு வாகனமாகச் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள கனடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கார்னி இது குறித்த விவரங்களை வெளியிட்டார்.
இந்த நிதியம் 25 பில்லியன் டொலர் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் கூடுதல் பணம் இருந்தால், இந்த நிதியத்தில் நீங்கள் முதலீடு செய்து நாட்டை வலிமையாக்க உதவலாம்” என்று குறிப்பிட்ட பிரதமர், இது ஒரு ‘மக்களுக்கான நிதியம்’ என தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதனால் கனடாவின் எண்ணெய் உற்பத்தி மாகாணங்களில் வருவாய் பெருகியுள்ளது, இது நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிதியமானது நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறக் கூடிய, அரசாங்கத்தின் தலையீடு இல்லாத ஒரு சுதந்திரமான பொதுத்துறை நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்.
புதிய சுரங்கங்கள், இயற்கை எரிவாயு (LNG) மற்றும் நீர்மின் திட்டங்கள் போன்ற தேச நிர்மாணப் பணிகளுக்கு இந்த நிதி முன்னுரிமை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.