Reading Time: < 1 minute

கனடாவில் உள்ள கொஸ்ட்கோ கிளைகளில் விற்பனை செய்யப்பட்ட பிரபல பீட்சா தயாரிப்பு ஒன்றில் ‘பூஞ்சை வளர்ச்சி’ காணப்படலாம் என்ற அச்சத்தில், அந்தத் தயாரிப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory
  • தயாரிப்பு பெயர்: Gino Bambino Gluten Free Pizza Kits
  • விற்பனை காலம்: டிசம்பர் 2025 முதல் ஏப்ரல் 2026 வரை.
  • Costco குறியீட்டு எண்: 1974721
  • பாதிக்கப்பட்ட திகதிகள்: ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய திகதிகளை ‘Best-before’ ஆகக் கொண்ட தயாரிப்புகள். (இவை பாக்கெட்களில் 2026 AL 22 மற்றும் 2026 AL 28 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்).

இந்தத் தயாரிப்புகளைத் தயாரித்த மொழினாரோ பைன் இட்டாலியன் புட்ஸ் நிறுவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த திகதிகளைக் கொண்ட பீட்சா கிட்களை உட்கொள்ளவோ, மற்றவர்களுக்குப் பரிமாறவோ அல்லது விற்பனை செய்யவோ வேண்டாம் என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கியவர்கள், அவற்றை அருகில் உள்ள கிளைகளுக்குக் கொண்டு சென்று முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.