Reading Time: < 1 minute

கனடாவின் நோர்த் யோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

31 வயதான நபரே இவ்வாறு கொள்ளப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் யோங் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இடம் பெற்றிருந்தது.

31 வயதான டெவன் பம்பல் என்ற டொரன்டோவை சேர்ந்தவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.