Reading Time: < 1 minute

கனடாவின் ஹெட்மாண்டன் பகுதியில் வேற்றுக்கிரக வாசி போன்று முகமூடி அணிந்து நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

Tamil Business Directory

கடையொன்றுக்குள் புகுந்த குறித்த நபர் கடையின் காசாளரை அச்சுறுத்தி சுமார் 6000 டொலர்கள் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

குறிப்பாக சிகரெட் வகைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை குறித்த நபர் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களோ கடையின் பணியாளர்களோ காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி முனையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேற்று கிரக வாசி போன்று முகமூடி அணிந்து கருப்பு நிற ஆடையில் தோன்றி குறித்த நபர் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.