வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக தங்கியிருந்த கனடா நாட்டுப் பிரஜையான தமிழர் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
கனடா, டொராண்டோவைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா நகரை நோக்கி வாடகை வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை கவனித்த வாகன சாரதி, உடனடியாக பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.