Reading Time: < 1 minute

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (European Union) கனடாவின் அடுத்த தூதராக முன்னாள் அமைச்சரான ஜொனாதன் வில்கின்சனை பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை நியமித்துள்ளார்.

Tamil Business Directory

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நியமனத்தை வில்கின்சன் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகளாவிய சூழல் அடிப்படை ரீதியாக மாறியுள்ள இந்தத் தருணத்தில், கனடியர்களின் நீண்டகால நலன்களுக்காகவே இந்தப் புதிய பொறுப்பை ஏற்பதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு இடையிலான தங்கியிருக்கும் தன்மையைக் குறைத்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை வலுப்படுத்தும் பிரதமர் மார்க் கார்னியின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

வில்கின்சனின் அனுபவம் அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் நிலைத்தன்மையை உருவாக்க உதவும் என பிரதமர் கார்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2015 முதல் வடக்கு வான்கூவர்-காப்பிலானோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வில்கின்சன், வரும் கோடைக்காலத்தின் தொடக்கத்தில் தனது புதிய பணியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜொனாதன் வில்கின்சன் பதவி விலகுவதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இவரது வெளியேற்றத்திற்குப் பிறகு லிபரல் அரசாங்கத்தின் பலம் 173 இடங்களாகக் குறையும் என்றாலும், சபாநாயகரைத் தவிர்த்து 172 இடங்களுடன் அவைத் தங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

ஏற்கனவே பெப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் பில் பிளேயர் இங்கிலாந்திற்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு மூத்த தலைவர் தூதர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.