Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது.

Tamil Business Directory

இதன்படி, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,979ஆக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றால் 102 பேர் உயிரிழந்ததோடு, 906பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89,418ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 34,921பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 47,518பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,618பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.