Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணமல் போயுள்ள இரு இளம் சகோதரிகளை, சர்ரே பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
10 வயதான ஷான்டே ஜோசப் மற்றும் 13 வயதான நிகிதா ஜோசப் ஆகிய இருவருமே, இவ்வாறு காணமல் போயுள்ளனர்.
6400 பிளொக்- 121ஆவது வீதியில் இருவரும் இறுதியாக காலை எட்டு மணிக்கு இறுதியாக காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறுமிகளும் ஐந்து அடி இரண்டு அங்குல உயரம், மெலிதான தோற்றம் மற்றும் நீண்ட கருமையான கூந்தலுடன் தோற்றமளிப்பதாக, பொலிஸார் விபரித்துள்ளனர்.
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள், தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.




