Reading Time: < 1 minute

கனடாவில் நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நபர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, இந்த சந்தேக நபர் தேடப்பட்டு வருகின்றார்.

இந்திய மாணவர் ஒருவரை படுகொலை செய்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 24 வயதான குர்விந்தர் நாத் என்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கொல்லப்பட்டார்.

பீட்சா விநியோகம் செய்ய சென்ற போது குறித்த மாணவர் கொள்ளையிடப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட அடிப்படையில் குறித்த மாணவரை வரவழைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மூன்றாவது சந்தேகநபரான 25 வயதுடைய டெவாண்டே தாம்சன் என்பவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.