Reading Time: < 1 minute

கனடாவில் ரயில்களில் பயணிகளை தாக்கி வந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

டர்ஹம் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில்களில் இவ்வாறு நபர் ஒருவர் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி வந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

அண்மையில் 50 வயதான பெண் ஒருவரை குறித்த நபர் தாக்கியிருந்தார்.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் குறித்த பெண் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதே நாளில் 2 மணித்தியால இடைவெளியில் 33 வயதான மற்றுமொரு பெண் ரயிலில் பயணித்த போது குறித்த அதே சந்தேக நபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களுடனும் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.