Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் வான்கூவார் பெரும்பாக பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக ஒருவர் காணாமல் போய் உள்ளார்.
குவாரி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நபர் இவ்வாறு மண் சரிவில் சிக்கி காணாமல் போய் உள்ளார்.
இந்த காணாமல் போன நபர் தொடர்பிலான எவ்வித விவரங்களும் இதுவரையும் வெளியிடப்படவில்லை.
தீயணைப்பு படையினர் குறித்த நபரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் மீட்பு பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு பிரவேசிக்க முடியாத நிலை தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




