Reading Time: < 1 minute

கனடாவில் பிரபல மரதன் ஓட்டப் போட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த நபர் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் மரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்ற ஒருவரே இவ்வாறே உயிரிழந்துள்ளார்.

ஒன்றாடியோ மாகாணத்தின் வின்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

57 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மைல் தூரம் ஓடியதன் பின்னர் திடீரென நோய் வாய்ப்பட்டு கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கீழே விழுந்தவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் இடையிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நபரின் மரணம் தொடர்பில் போட்டி ஏற்பட்டாளர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பாதையில் இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட மரதன் ஓட்ட போட்டி ஆண்டுதோறும் நடைபெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.