இந்த பருவகாலத்தின் முதலாவது பலத்த பனிப்பொழிவை ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகம் எதிர்கொள்ளும் நிலையில், மிகவும் மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு ரொரன்ரோ காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொரன்ரோ நகரில் இன்று காலையில் ஏற்கனவே பல வாகன விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த எச்சரிக்கையினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலவிவரும் பனிப்பொழிவு இன்று முழுவதும் தொடரும் என்று எதிர்பார்ககப்படும் நிலையில், இன்று மேலும் பல வீதி விபத்துக்ள பதிவாகக்Read More →

ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் (Premier Kathleen Wynne) எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு குறித்த வழக்கு தாக்கல் செய்துள்ளார். மாகாண தேர்தல் இடம்பெறுவதற்கு ஆறு மாதங்களிற்கு குறைவான காலம் இருக்கையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்ரம்பரில் புரோகிறசிவ் கன்சவேட்டிவ் தலைவர் (PC Party) பற்றிக் பிறவுன் (Patrick Brown) தெரிவித்த கருத்துக்கள் குறித்து இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சாட்சியாக சாட்சியமளிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இரண்டு மாகாணRead More →

மொன்றியலில் (Montreal, Canada) வசிக்கும் மிகா கேப்ரியல் (Micah Gabriel Masson Lopez) என்னும் 2 வயது சிறுவன் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பீச் பழங்களை மட்டும் உண்டு வாழ்கின்ற நிலை உருவாகியுள்ளது. குறித்த சிறுவனுக்கு உணவு ஒவ்வாமை நோய் மரபணுகுறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பீச் பழங்களை தவிர வேறு எந்த உணவை உண்டாலும் இவனது உடல் ஏற்றுக்கொள்வதில்லையாம். இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில். ஆறு மாதங்களுக்கு முன்புதான்Read More →

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள மக்களுக்கு அடிப்படை ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரீமியர் (Premier) Philippe Couillar குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கியூபெக் மாகாணத்தில் உள்ள சுமார் 84,000 பேர் குறித்த திட்டத்தினால் பலனடைவார்கள் என நம்பப்படுகிறது. குறிப்பாக போதிய வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், உடல் மற்றும் அறிவார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் இத்திட்டத்தில்Read More →

கனடாவில் நோய் வாய்ப்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் முதியவர் உயிரிழந்துள்ளார். நோவ ஸ்கோடியா மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உடல்நல கோளாறு காரணமாக 89 வயது முதியவர் ஒருவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு யார்மவுத் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் மோதியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வேறு ஆம்புலன்ஸில் வந்தRead More →

ஸ்காபுரோ மோர்னிங்சைட் உயர் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் கட்டிடத்தின் 17-மாடி கட்டட மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்னிங்சைட் மற்றும் எல்ஸ்மியர் வீதியில் அமைந்துள்ள மோனல் கோர்ட் (Mornelle Court) கட்டிடத்தில் சம்பவம் நடந்துள்ளது. ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினர் கட்டிடத்தின் குடியிருப்பாளர்கள் அனைவரையும் சுற்றாடல்களில் சுற்றியுள்ள பகுதிகளையும் வெளியேற்றம் செய்துள்ளனர். குடியிருப்பாளர்கள் அருகாமையில் உள்ள புகலிடத்தை நாடலாம் அல்லது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் நண்பர்களை நாடலாம் எனவும்Read More →

கனேடிய பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொகுதி வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று (Dec 11, 2017) இடம்பெறுகின்றன. ஒன்ராறியோவில் Scarborough-Agincourt தொகுதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் South Surrey-White Rock தொகுதி, சாஸ்காச்சுவானின் Battlefords-Lloydminster தொகுதி Newfoundland and Labradorஇல் Bonavista-Burin-Trinity ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகளே இன்று நடைபெறுகின்றன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அறிவிப்பினை கடந்த மாதம் பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau)Read More →

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கனடாவின் கிரேட்டர் மான்ட்ரியல் பகுதியில் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியொன்று கொண்டாடப்பட்டுள்ளது. Leucan சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியானது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகள் உட்பட 400 நபர்களுடன் மகிழ்ச்சியாக இடம்பெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய குறித்த குழந்தைகளுக்காக சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா கிளாஸ் போன்ற ஏற்பாடுகளை Leucan சங்க இயக்குனர் Carol Beaudry பொறுப்பேற்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்Read More →

எட்டோபிக்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோசமான விபத்தினை அடுத்து, நெடுஞ்சாலை 401 ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 5.30 அளவில், இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்குண்ட காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், கனரக வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினைRead More →

ஞாயிற்றுகிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகம் முதலாவது தீவிர குளிர்காலத்தை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ நகர் அதே போன்று ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கு ஒரு விசேட காலநிலை அறிவிப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை பிற்பகுதியில் பலத்த பனிப்பொழிவு ஏற்படலாம் எனவும் திங்கள்கிழமை அதிகமான பனி பொழியலாம் எனவும் கனடா சுற்றுசூழல் சுருக்கமாக தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு இன்று ஏற்படலாம் எனRead More →