Reading Time: < 1 minute

நேற்று காலை Bridle Path பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Timberglade Court பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு நேற்று காலை ஆறு மணியளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்ட போதிலும், வெளியேதான் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தாங்கள் நம்புவதாக ரொரன்ரோ காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண் உடலின் மேற்பாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நிலத்தில் வீழந்து கிடந்ததாகவும், எனினும் அவர் சுவாசித்தவாறு சுயநினைவுடன் காணப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து அந்த நபர் உயிராபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்த போதிலும், அவர் உயிர் பிழைத்து விடுவார் என்று நம்புவதாக பின்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.