Reading Time: < 1 minute

York University Heights பகுதியில், பெருமளவானோர் நிறைந்திருந்த கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

Finch Avenue West மற்றும் Keele Street பகுதியில் அமைந்து்ளள District 45 எனப்படும் இரவுக் கேளிக்கை விடுதியினுள், இன்று அதிகாலை 2:15 அளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

அங்கு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த போது அங்கே மூவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தாங்களாகவே உள்ளூர் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்திருந்ததாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் உயிராபத்தான நிலையில் காணப்பட்டுவதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த கேளிக்கை விடுதியின் பின்புறத்தில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும், அங்கே பல வெற்றுத் தோட்டாக்கள் காணப்பட்டதாகவும், பெருமளவானோர் அங்கு இருந்த வேளையிலேயே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.