Reading Time: < 1 minute
Tamil Business Directory
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதன்கிழமை முன்னதாக தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜெமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளும் வரும் வாரங்களில் நேரடியாக சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடா முன்வைக்கும் வர்த்தக உடன்பாட்டுக்கான யோசனைகளுக்கு திறந்த மனப்பாங்குடன் இருப்பதாகவும் கிரியர் தெரிவித்தார்.
எங்களுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களிடம் சில யோசனைகள் உள்ளன.
அதற்கு நாங்கள் வெளிப்படையாக திறந்த மனப்பாங்குடன் இருக்கிறோம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.