Reading Time: < 1 minute

கனடாவில் 2024 ஆம் ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட கனடிய பொலிஸ் (RCMP) உத்தியோகத்தர்கள் மீது ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

Tamil Business Directory

கனடிய பொலிஸ் வெளியிட்ட தகவலின்படி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டில் 408 ஊழியர்களைச் சார்ந்து மொத்தம் 443 ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் விசாரணை முடிவடைந்த வழக்குகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதி “கடுமையான” ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

கடுமையான நடவடிக்கைகளில் பதவி உயர்வு தகுதி நீக்கம், 80 மணிநேரத்திற்கும் அதிகமான சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை போன்றவை அடங்கும்.

மேலும், 10 உத்தியோகத்தர்கள் தாழ்ந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு அளவாகும். மிகவும் கடுமையான நடவடிக்கையாக, 7 சந்தர்ப்பங்களில் பணிநீக்கம் அல்லது தன்னார்வ ராஜினாமைக்கு உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் ஜனவரி 21 ஆம் திகதி அமைதியாக வெளியிடப்பட்ட “கனடிய பொலிஸ் ஒழுங்கு மேலாண்மை அறிக்கை”யில் இடம்பெற்றுள்ளன.

தனிப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்படாதபோதிலும், ஒழுங்கீன நடத்தைகளில் தவறான சமூக ஊடக பதிவுகள், பாலியல் ஒழுங்கீனம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குற்றச் சட்ட மீறல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.