Reading Time: < 1 minute

கனடாவில் வாங்கூவர் தீவின் வான்ஐல் மாரினாவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சொகுசு படகுகள் முழுமையாக சேதமடைந்து மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil Business Directory

சிட்னி தீயணைப்பு துறையின் தலைவர் பிரெட் மிக்கெல்சன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தீயில் உண்டான புகை, தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் தெளிவாகக் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக்கெல்சன் கூறியதாவது, தீயணைப்பு வீரர்கள் வந்தப்பொழுது மூன்று 70 அடி நீளமான படகுகள் முழுமையாக தீயில் மூழ்கியிருந்தன.

தீயை கட்டுப்படுத்த பணியாற்றிய குழுக்கள் சுமார் 90 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

எனினும், தீ, புகை மற்றும் நீரில் சில படகுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.