Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் பொதுநிகழ்வுகள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் பலவும் பிற்போடப்பட்டு வருகின்றன.
250 பேருக்கு மேலாக ஒன்றுகூடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருப்பதோடு, முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கனடிய வர்த்தக சம்மேளனம் உட்பட பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் பிற்போட்டிருப்பதாக அறிவித்திருகின்றது.
இதேவேளை திருமணம், பிறந்தநாள் என பல்வேறு குடும்ப நிகழ்வுகளும் ஒத்திவரைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.




