Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டன் பகுதியில் நடைபெற்ற ஒகேனகன் கிரான்போன்டோ (Okanagan Granfondo) சைக்கிள் போட்டி நிகழ்வின் போது, காரொன்றுடன் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

மேலும் இரண்டு சைக்கிளோட்ட வீரர்கள் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் வைற் லேக் வீதிப் (White Lake Road ) பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஓகன்கான் கிரான்போன்டோ விபத்து காரணமாக வைற் லேக் வீதி (White Lake Road) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒகேனகன் கிரான்போன்டோ (Okanagan Granfondo) என்பது வட அமெரிக்காவின் முக்கிய சைக்கிள் போட்டிகளில் ஒன்றாகும்.

இது பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகேனகன் (Okanagan) மது உற்பத்தி மாவட்டம் வழியாக நான்கு மாறுபட்ட பாதைகளில் நடைபெறும்.

இந்த நிகழ்வில் சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதும், விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்நாட்டு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.