Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஸ்டீவன் மார்லோ கல்லாகர் (32) என்ற நான்கு குழந்தைகளின் தந்தைக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 1ம் திகதி ஒசோயூஸில் (Osoyoos) நடந்த கனடா தின கொண்டாட்டத்தின் போது, மக்கள் நிரம்பிய கடற்கரையில் தன்னிச்சையாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார்.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தினால் பலர் பீதியடைந்தனர் எனவும் அந்தப் பாதிப்பு இன்னமும் சிலருக்கு நீடித்து வருவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.