Reading Time: < 1 minute

கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

ருதர்போர்ட் மற்றும் செல்பி வீதிகளுக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது. வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகாமையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

பீல் பிராந்திய பொலிசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆறு பேர் ஒரு வாகனத்தில் இருந்த போது அருகாமையில் வந்த மற்றுமொரு வாகனத்தில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் வாகனத்தின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயம் அடைந்தவர்களின் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.