Reading Time: < 1 minute

ரொறொன்ரோவின் கோர்சோ இத்தாலியா பகுதியில் TTC பேருந்தில் பயணித்தபோது, பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

குறித்த நபர் பயணிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் டஃபெரின் தெரு மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூ வெஸ்ட் என்பனவற்றுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மோசமாக நடந்து கொண்டதாகவும் பயணிகள் குறித்த நபரை தடுக்க முயற்சித்த போதும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

அவர் 40 முதல் 50 வயதுடையவர் என்றும், ஆறு அடி இரண்டு முதல் ஆறு அடி மூன்று அங்குல உயரம் வரை மெலிதான உடல்வாகு, மற்றும் குட்டையான கறுப்பு முடி மற்றும் தாடியுடன் விவரிக்கப்படுகிறார்.

சந்தேக நபர் கடைசியாக இராணுவ பச்சை நிற கேமோ நிற பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபர் பற்றி தெரிந்தால் 416-808-1300 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.