Reading Time: < 1 minute

கனடாவின் வடக்கு இட்டாபீகாக் பகுதியில் இரண்டு நபர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

மவுன்ட் ஒலிவ் மற்றும் கிப்லிங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலை தொடர்பான தகவல்கள் எதுவும் பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான நபரும் காயமடைந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை.