Reading Time: < 1 minute

Roncesvalles பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

Roncesvalles Avenue மற்றும் Grenadier வீதியில் அமைந்துள்ள Domani உணவகத்திற்கு வெளியே, நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கே பல தடவைகள் துப்பாககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது அங்கே ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர், இதுவரை கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கொலை இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிப்் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக சந்தேக நபர் செலுத்திவந்த பழைய ரக மேர்சிடிஸ் பென்ஸ் வகை கார் ஒன்று சிறிது நேரம் அங்கு காத்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட வாகனத்தில் ஒரு சாரதியும் ஒரு துப்பாக்கிச் சூட்டாளரும் இருந்திருக்க வேண்டும் எனவும், தாம் இது தொடர்பில் சில ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும், தடயவில் நிபுணர்கள் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர் இறுதியாக Constance Streeஇல் மேற்கு நோக்கித் தப்பிச் சென்றமை அவதானிகக்ப்பட்டுளய்ளதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை காவல்துறையினரால் சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.