Reading Time: < 1 minute

பிரம்டனில் 51 வயது ஆண் ஒருவர் தனது மனைவியையும் 13 வயது மகனையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Williams Parkway மற்றும் Torbram வீதிப் பகுதியில், Josephine Courtஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 5:45 அளவில் குறித்த அந்த வீட்டில் கத்திக் குத்து இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், மற்றுமொருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் கொலை மற்றும் ஒரு தற்கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் 53 வயதுப் பெண் மற்றும் 13 வயதுச் சிறுவன் என்பதனை விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்தக் கொலைகளை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் 51 வயது ஆண் எனவும், அவர் கொலையுண்ட பெண்ணின் கணவர் மற்றும் சிறுவனின் தந்தை என்றும் அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கொலைகளை மேற்கொண்ட சந்தேக நபர், அதன்பின்னர் அந்த வீட்டிலிருந்து வாகனம் ஒன்றில் வெளியேறிச் சென்று, பிரம்டனின் Williams Parkway மற்றும் நெடுஞ்சாலை 410 பகுதியில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.