Reading Time: < 1 minute

கனடாவில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கடந்த ஜனவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2196 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வாடகைத் தொகை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பத்து வீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Rentals.ca என்ற இணைய தளம் இது தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கேள்வி அதிகரிப்பு காரணமாக கனடாவில் வீடுகளின் வாடகைத் தொகை தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கனடாவில் மிகவும் அதிகமான வாடகைத் தொகை பதிவாகும் நகரமாக வான்கூவார் கருதப்படுகின்றது.

ஒரு படுக்கை அறையைக் கொண்டு வாடகை வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வான்கூவாரில் ஒரு படுக்கை அறையைக்கொண்ட வீடு ஒன்றின் சராசரி வீட்டு வாடகைத் தொகை 2683 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.