Reading Time: < 1 minute

கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த ஈழத்தமிழரான நிஷாந்தன் துரையப்பா (Nishan (Nish) Duraiappah), Peel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்.

கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி ஹால்டன் பிரதி பொலிஸ் மாஅதிபராக 2015ம் ஆண்டு பதவி உயர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது புதிய பொறுப்பை October மாதம் முதலாம் (OCT 01, 2019) திகதி முதல் ஏற்கவுள்ளார்.