Reading Time: < 1 minute

ஓட்டாவா, குடியிறுப்பொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

251 டொனால்ட் செயின்ட் பகுதியில் உள்ள குடியிறுப்பொன்றின் 14 மாடியிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 63 வயதான ஆணொருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தீ விபத்தின் போது 20 பேர் இடமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தின் போது குறித்த பகுதியே கரும் புகையால் சூழப்பட்டிருந்ததாகவும், ஜன்னல் வழியாக பாரிய தீ பிழம்புகள் தென்பட்டதாகவும், குறித்த தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே குடியிறுப்பு பகுதியில் கடந்த டிசம்பர் மாதமும், தீ விபத்தொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.